Friday, December 9, 2011

தனி வழி

அரசமரத்தடி பிள்ளையார் முதல் ஏழுமலையன் வரை
காஸ்ட்லி ஆகிவிட்ட கடவுளை காண தனி வழி,
இறைவனுக்கு கூட ஒதுக்க நேரம் இல்லாமல்
கரன்சி இட்டும் மனிதர்களுக்கான மோட்ச வழி,
பாவப்பட்ட சாமான்யர்களுக்கு உண்டு பொது வழி
அதுவும் இடைவெளியல் இடை நுழைக்கும் போட்டி வழி.
கோவிலின் கோபுரங்களில் வசிக்கும் மாடபுறாக்கள்
இறைவனை தரிசிக்க, இல்லை தடை வழி. ஆனால்,
யாருடைய குறைகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று கடவுளுக்கே
ப்ரயொரிட்டி ஒதுக்கும் மனிதர்கள் வாழும் இந்த உலகில்
இறைவனை சென்றடைய என்ன வழி?
.

No comments:

Post a Comment